சினிமா

நம்ம ரூட் தனி ரூட்!.. சைட்ல பாத்து பழக்கமே இல்ல!.. தெறிக்கவிட்ட தனுஷ்!

துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் திருடா திருடி, காதல் கொண்டேன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். ஒருபக்கம் கமர்சியல் மசாலா படங்கலில் நடித்தாலும் மறுபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் எனவும் தனுஷ் நிரூபித்தார்.

குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் அவருக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது. தற்போது தனுஷ் போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற 30ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே இது தொடர்பான புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய தனுஷ் அவரின் வெற்றிக்கான ரகசியத்தை கூறினார்..

நாம எப்பவுமே தனி ரூட்டில் போயிட்டு இருக்கோம். மத்தவங்க ரூட்டுக்கு நாம போறது இல்ல.. அதனால என்னிக்குமே நான் நேத்திருந்து வெர்ஷனை இன்னைக்கு போட்டியா வச்சுப்பேன்.. அதைவிட இன்னைக்கு நான் பெட்டரா இருக்கணும்.. நேத்து எப்படி நடிச்சாலும் அதைவிட இன்னைக்கு பெட்டரா நடிக்கணும்.. நேத்து கொடுத்த வசூலோட இன்னைக்கு அதிகமா கொடுக்கணும்.. இன்னைக்கு அதிகமா சாதிக்கணும்.. இதை மட்டும்தான் நான் போட்டியா வச்சிக்கிறேன்.. அதாவது குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி நேரா பார்த்துகிட்டு ஓட மட்டும்தான் எனக்கு தெரியும்.. சைடுல பார்க்கிற வேலையே இல்ல’ என்ன பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்