இந்தியா

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன், தற்போது முறைப்படி வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

ஏப்ரல் 27-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் அவர் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார். சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரறிவாளன் உட்பட மொத்தம் 1,248 பேர் வழக்கறிஞர்களாப் பதிவு செய்துள்ளனர்.
சிறையில் இருந்த 31 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றத்தால் விடுதலையான பேரறிவாளன், தனது சிறைவாசத்தின் போதே இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பில் ஆகிய பட்டப்படிப்புகளை முடித்திருந்தார். விடுதலையான பிறகு பெங்களூருவில் உள்ள ஒரு சட்ட கல்லூரியில் மூன்று ஆண்டு சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். தற்போது முறைப்படி பார் கவுன்சிலில் பதிவு செய்ததன் மூலம், அவர் தனது புதிய வாழ்வை தொடங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் தலைமை தாங்கினார். நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு பிறகு விடுதலையான ஒருவர், அதே சட்டத்துறையில் வழக்கறிஞராக பணியாற்ற பதிவு செய்திருப்பது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பல ஆண்டுகள் சிறையிலிருந்தும் தனது கல்வியை தொடர்ந்த பேரறிவாளனின் இந்த முயற்சி பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்