நடிகர் விஜய் திரிஷாவுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கூறி விவாகரத்திற்கு விண்ணப்பித்தார்.
அது நடந்த சில நாட்களிலேயே விஜய் திரிஷாவை அழைத்துக்கொண்டு ஒரு திருமணத்திற்கு சென்றார். எனவே சங்கீதா சொன்னது திரிஷாவைத்தான் என ரசிகர்கள் உறுதி செய்தார்கள்.
தற்போது வரை விஜயும், திரிஷாவும் இதுபற்றி விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையிதான் கேரளாவின் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் சாமுண்டி மலைக்காஎன்பவர் ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
திரிஷா ஒரு மலையாளி.. அவரின் குலதெய்வம் சோட்டானிக்கரை பகவதி அம்மன். அந்த அம்மனுக்கு சக்தி அதிகம். விஜய் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு காரணமே திரிஷாதான். திரிஷா விஜயுடன் இருக்கும் வரை விஜயை யாராலும் எதுவும் செய்ய முடியாது. திரிஷாவால் விஜயின் மீது உருவாகியுள்ள நெகட்டிவ் இமேஜ் கூட பாசிட்டிவாக மாறிவிடும். மைனஸ் பிளஸாக மாறிவிடும். பொறுத்திருந்து பாருங்கள்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நான் விஜயை பார்த்திருக்கிறேன். நான் இந்த பக்கம் நடுவில் அம்மன் அந்த பக்கம் விஜய் நின்று பிரார்த்தனை செய்ததை நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் ஆணித்தரமாக சொல்கிறேன்.. பகவதி அம்மனின் அனுகிரகம் இருக்கும் யாரையும் அவ்வளவு சுலபத்தில் வீழ்த்தி விட முடியாது.. அவர்கள் யாரும் தோற்றதாக சரித்திரம் கிடையாது.

