சினிமா

ஆண்டவன் கைவிடமாட்டான்!..நல்லதே நடக்கும்.. வெங்கட் பிரபு டிவிட்!

ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஏப்ரல் கடந்த மே 4ம் தேதி எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக இரண்டாம் இடத்திற்கும் அதிமுக மூன்றாம் இடத்திற்கும் சென்றது.

விஜய்க்கு அதிக தொகுதிகள் கிடைத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது. இதில் காங்கிரஸ் மட்டுமே விஜய்க்கு ஆதரவளிக்க முன் வந்திருக்கிறது. இதையடுத்து தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அது கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இதையடுத்து விஜயின் முதல்வர் பதவியேற்பு விழாவும் தள்ளி போடப்பட்டிருக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தால் மட்டுமே அடுத்த வேலைகளை தொடங்குவோம் என ஆளுநர் சொல்லிவிட்டதால் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பெறும் முயற்சியில் தவெக இறங்கியிருக்கிறது.

இதில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் அதிமுக என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில்தான், விஜயை வைத்து கோட் படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் ‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விடமாட்டான்.. நல்லதே நடக்கும்.. நம்பிக்கையோடு இருப்போம்’ என பதிவிட்டிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்