நடிகர் ரவி மோகன் கடந்த பல மாதங்களாக அவரின் மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஒருபக்கம் ரவிக்கு நெருக்கமான தோழியாக இருந்த கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதோடு சைபர் புல்லிங் செய்து தன்னைப்ப்பற்றி சிலர் தவறான இமேஜை ஏற்படுத்துவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும், தனக்கு எதிராக ஒரு குழுவே இயங்குவதாக கூறிய கெனிஷா ஒருகட்டத்தில் விரக்தியடைந்து இனிமேல் என்னை பற்றி நான் விளக்கம் அளிக்க போவதில்லை.. நான் சென்னையை விட்டு செல்கிறேன்.. சமூகவலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப்போகிறேன்’ என பதிவிட்டிருந்தார். இதையஎடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் ஆர்த்தியின் குடும்பத்தை பற்றி பல பகீர் தகவல்களை கூறினார். அப்போது கண்ணீர் விட்டும் அழுதார்.
எனது வாழ்க்கையை அழித்ததே அந்த மூன்றெழுத்து இட்லி நடிகைதான் என்று குஷ்பு மறைமுகமாக குறிப்பிட்டார். ஏனெனில் ரவியின் மாமியார் சுஜாதாவும் குஷ்புவும் நெருங்கிய தோழிகள். குஷ்புதான் திட்டமிட்டு ஆர்த்தியை ரவியுடன் பழகவைத்து ஏதேதோ நடந்து அவர்களின் திருமணம் நடந்ததாக அப்போதே செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், இந்த குற்றச்சாட்டை குஷ்பு மீது வைத்திருக்கிறார் ரவி மோகன். என் குடும்பத்தை அவர் தவறாக பேசுகிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?.. பல குடும்பங்களை கெடுத்த பொம்பள.. அவரெல்லாம் என்ன மாதிரியான பொம்பளை என்றெல்லாம் பொங்கியிருந்தார் ரவி மோகன்..
ஆனால் குஷ்பூ கொஞ்சமும் கூச்சமின்றி தனது எக்ஸ் தளத்தில் ‘தங்களை நிரூபிப்பது சிலருக்கு மரபணுவிலேயே இருக்கிறது. நான் சொன்னது சரிதான் என நிரூபித்ததற்கு நன்றி’ என பதிவிட்டிருந்தார். அதில் போய் கமெண்ட் போடும் ரசிகர்கள் பலரும் குஷ்புவை மானாவாரியாக திட்டுகிறார்கள்..
‘இன்னும் நிறைய குடும்பத்தை கெடுத்துவிடுங்க.. மத்தவங்க குடும்பத்துல ஏன் இப்படி மூக்கை நுழைக்கிறீங்க?.. இன்னும் எத்தனை பேர் குடும்பத்தை இப்படி கெடுப்பிங்க?’ என்றெல்லாம் பலரும் அவரைத் திட்டி வருகிறார்கள்.

