இலங்கை

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அசாத் மௌலானா வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் சென்றிருந்ததாகவும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிப்பதாக அவர்கள் கூறியிருந்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரே வாரத்துக்குள் அவரைப் பிணையில் விடுவிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு வெளிக்கொண்டு வந்திருந்தார்.

பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான அசாத் மௌலானாவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வாக்குமூல ஆவணங்களும் இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்