சினிமா

திரிஷ்யம் 3 படந்தால் கவுந்த கருப்பு!.. கலெக்‌ஷன் போச்சே!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் கருப்பு. பல வருடங்களுக்கு பின் சூர்யா ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் படமாக கருப்பு அமைந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதை.

அநீதியை தட்டிக் கேட்கும் கருப்பண்ணசாமியாக இந்த படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தில் கருப்பண்ணசாமி வந்து ஆடும் போது தியேட்டரில் ரசிகர்கள் சாமியாடுகிறார்கள். படம் வெளியான நாள் முதலே இந்த படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வருகிறது. படம் வெளியாகி நான்கு நாட்களில் இந்த படம் 147 கோடி வசூல் செய்ததாக படக்குழுவே அறிவித்தது.

இந்நிலையில்தான், மோகன்லால் நடிப்பில் இன்று வெளியான மலையாளப்படமான திரிஷ்யம் 3 திரைப்படம் கருப்பு படத்திற்கு எமனாக அமைந்துவிட்டது. கருப்பு படம் நன்றாக ஓடிக் கொண்டிருந்த கேரளாவிலும், வெளிநாடுகளிலும் அந்த படத்தை தூக்கிவிட்டு திரிஷ்யம் 3 திரைப்படத்தை திரையிட்டு விட்டார்களாம்.

இதனால் கருப்பு படத்தின் வசூல் குறையும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கருப்பு படம் இப்போதும் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்