சினிமா

பிரைவேட் ஜெட் வேண்டாம்!. அல்லு அர்ஜூன் காட்டும் எளிமை.. தயாரிப்பாளர் ஷாக்!

தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களும் அல்லு அர்ஜூனை பேன் இண்டியா நடிகராக மாற்றியுள்ளது. அதிலும், புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

புஷ்பா 2-வுக்கு பின் அட்லி இயக்கத்தில் ராக்கா என்கிற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹாலிவுட் கலைஞர்களோடு சேர்ந்து உருவாக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், ஒரு முக்கிய செய்தி வெளியே கசிந்திருக்கிறது.

ஹைதராபாத் மற்றும் மும்பை இடையே ராக்கா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. எனவே, அங்கும் இங்கும் சென்றுவர அல்லு அர்ஜூனுக்கு பிரைவேட் ஜெட்டை சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால், அதை ஏற்க மறுத்து சாதாரண விமானத்திலேயே பயணம் செய்கிறாராம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்