உலகம்

இனிமே பேங்காக் போக விசா வேணும்!.. தாய்லாந்து அரசு அறிவிப்பால் அதிர்ச்சி!

உலகில் உல்லாசத்தை விரும்பும் பலரும் சுற்றுலாவுக்கு தாய்லாந்தை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில் அங்கு அழகான இடங்கள், பொழுதே போக்குவதற்கு நிறைய கேளிக்கை விடுதிகளும் இருக்கின்றன. குறிப்பாக தாய்லாந்தின் தலைநகர் பேங்காங்கில் உல்லாச பேர்வழிகளை குஷிப்படுத்தும் நிறைய விஷயங்கள் அங்கே இருக்கிறது.

குறிப்பாக பெண்கள் கையால் மசாஜ் உள்ளிட்ட பல உல்லாச அனுபவங்கள் அங்கு ஆண்களுக்கு கிடைக்கும். இதனாலேயே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பேங்காங்கிற்கு பலரும் படையெடுக்கிறார்கள். இந்நிலையில் தாய்லாந்துக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் அனுபவித்து வந்த விசா இல்லாத நுழைவு (Visa Free Entry) சலுகையை அந்த நாட்டு அரசு தற்போது ரத்து செய்திருக்கிறது.

அதாவது இந்திய பயணிகள் இனி வருகை விசா (VISA ON ARRIVAL – VOA) பிரிவின் கீழ் மட்டுமே தாய்லாந்து நாட்டுக்குள் நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து விசாவை பெறுவதற்கு இரண்டு வழிகள் இருக்கிறது.

ஒன்று தாய்லாந்துக்கு செல்ல விரும்புபவர்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் EVOA வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் படிவத்தை சமர்ப்பித்து விசா கட்டணம் 2000 THB மற்றும் அதற்கான செயலாக்க கட்டணங்களை செலுத்தி ஆன்லைன் ஒப்புதல் பெற்ற பிறகு தாய்லாந்து விமான நிலையத்தை அடைந்தவுடன் பிரத்யோக பாதையை பயன்படுத்தி விரைவாக வெளியேறலாம்.

அல்லது தாய்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு அங்கே உள்ள பிரத்யோக கவுண்டரில் படிவத்தை நிரப்பி பாஸ்போர்ட், புகைப்படம், திரும்பும் விமான டிக்கெட் மற்றும் தங்குமிட விவரங்களை சமர்ப்பித்து விசா கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு 15 நாட்கள் வரை தங்குவதற்கான விசா முத்திரை வழங்கப்படும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த