தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷால். திமிரு, சண்டக்கோழி, இரும்புத்திரை, மார்க் ஆண்டனி போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதேநேரம் வெற்றி படங்களை விட அதிக தோல்வி படங்களையும் விஷால் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில்தான், மகுடம் என்கிற திரைப்படத்தை அவரே இயக்கி நடத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. டீசரை பார்க்கும்போது மார்க் ஆண்டனி படத்தில் வரும் காட்சிகள் நினைவுக்கு வருகிறது. ஏனெனில், மகுடம் படத்திலும் விஷால் வயதான கேங்கஸ்டராக ஒரு கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
மேலும், இளமையான விஷாலாகவும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். மார்க் ஆண்டனி விஷாலுக்கு வெற்றி படமாக அமைந்ததால் அதே ஸ்டைலில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் விஷால். இந்த டீசரை பார்த்த பலரும் மாஸ் அண்ட் OG விஷால் கம்பேக் என பதிவிட்டு வருகிறார்கள். மகுடம் படத்தில் அஞ்சலியும் நடித்திருக்கிறார். அதோடு, வாயில் கத்தியை வைத்துகொண்டு சண்டையும் போட்டிருக்கிறார்.

