இந்தியா

அகில இந்திய காங்கிரஸுக்கு புதிய தலைவர்!.. லிஸ்டில் ப.சிதம்பரம் பெயர்!

கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. மாறாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது. அதாவது கடந்த மூன்று தேர்தலிலும் வெற்றி பெற்று நரேந்திர மோடியே பிரதமராக நீடித்து வருகிறார்.

கடந்த மூன்று தேர்தலிலும் வட இந்திய மக்கள் பாஜகவையே ஆதரித்து வாக்களித்து வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த மூன்று தேர்தலிலும் ராகுல் காந்தி எதிர்கட்சி தலைவராகவே இருக்கிறார். அவர் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தும் கூட வாக்குகள் காங்கிரஸ் பக்கம் செல்லவில்லை..

இந்நிலையில்தான், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மல்லிகார்ஜுனா கார்கே விரைவில் மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. அடுத்த தலைவருக்கான பரிசீலனை பட்டியலில் பா.சிதம்பரம் பெயரும் அடிபடுகிறது. பா.சிதம்பரத்திற்கு அந்த பதவி சொல்லவில்லை என்றால் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்