ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியை முழுமையாகவும் அல்லது அவசரத் தேவைக்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை UPI அல்லது ATM மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது PF கணக்கில் உள்ள 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பணத்தை வங்கிக்கணக்கிற்கு மாற்றி ஏடிஎம் அல்லது UPI மூலம் பெறும் புதிய வசதி இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. PF கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீத தொகை நீண்ட கால சேமிப்பாக கட்டாயம் இருக்கும். மேலும், அவசர தேவைகளுக்காக பணம் எடுக்கும் வரம்பு ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
மேலும் ஏடிஎம் மற்றும் UPI வழியாக பி.எப் பணம் பெறும் நடைமுறை மக்களுக்கு எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பி.எப் பணம் கிடைக்க 7 முதல் 10 நாட்கள் ஆகும் நிலையில் இனி UPI வசதி மூலம் உடனடியாக பணத்தை பெற முடியும்.

