திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு.. 2022ம் வருடம் சாலை விரிவாக்கம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட பல டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து, எ.வ. வேலு தொடர்புடைய 2 இடங்களில் இன்று காலை முதலில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு, திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது..
இந்த சோதனையில் கணக்கில் வராத 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருக்கிறது. நெடுஞ்சாலை துறை சார்ந்த ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாத சங்கரானந்த் நிறுவனத்திற்கு 3.23 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்திருக்கிறது.

