தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அவரும் தனுஷும் இணைந்து உருவாக்கிய ஆல்பம் பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி’ உலகெங்கும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. யூட்யூபில் அதிக வியூஸ் போன முதல பாடல் என்கிற சாதனை இந்த பாடலுக்கு உண்டு.
இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் இந்த பாடல் மூலம்தான் யுடியூப்பே ரசிகர்களுக்கு அதிகம் பிரபலமான. அதன்பின் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்து ஒருகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்..
ரஜினி தற்போது நடித்துள்ள ஜெயிலர் 2, அடுத்த நடிக்க உள்ள தர்மன் ஆகிய படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஒருபக்கம் சன் டிவியின் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், அனிருத்துக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்தி கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அவர்கள் இரு தரப்பும் அதை உறுதி செய்யவில்லை. இந்நிலையில்தன், இந்த தகவலை ஒய்.ஜி மகேந்திரன் உறுதி செய்திருக்கிறார். ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் ‘அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனிருத்துக்கு நான் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். காவ்யா மாறன் நிர்வாக திறமை கொண்டவர். அப்பாவின் தொழில்களில் சிலவற்றை கவனித்து வருகிறார். அனிருத்தம் அவரும் இணைந்து மியூசிக்கல் வியாபாரத்தை செய்யட்டும்’ என அவர் கூறியிருக்கிறார்.

