இந்தியா

விபத்தை தடுக்க வாகனங்களில் V2V வசதி!.. அடுத்த வருஷம் முதல் கட்டாயம்!..

இந்தியா பல துறைகளிலும் முன்னேறி வந்தாலும் சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகளை மட்டும் குறைக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் சாலை விபத்துக்கள் அதிமாகிக்கொண்டே போகிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வாகனங்கள் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படுகிறது.

இரு சக்கர வாகனங்களில் கார்கள் மோதி பலரும் தூக்கி வீசப்பட்டு இறந்து போகிறார்கள். அதேபோல், பேருந்தின் மீது இன்னொரு பேருந்தும், லாரியில் கார் மோதுவது என விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாலை விபத்துகளை குறைக்கவும், கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில்தான், வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது.. சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்ளும் V2V வசதியை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

V2V மூலம் ஒரு வாகனம் சாலையில் செல்லும்போது அருகில் உள்ள மற்ற வாகனங்களுடன் தானாகவே அது தகவல்களை பரிமாறிக் கொள்ளும். மேலும், அருகிலுள்ள வாகனத்தின் வேகம்.. அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை குறித்து ஓட்டுனர்களுக்கு அது முன்கூட்டியே எச்சரிக்கும்..

சிம் கார்டு இல்லாமல் வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் V2V கருவிகள் 5875 – 5905 GHZ அலைவரிசையில் இயங்கும். வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் இயங்கும் V2V திட்டத்திற்கான வரைவு விதிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்