திரைத் துறையில் பல வருடங்களாகவே சினிமா பத்திரிகையாளராக பயணித்தாலும் ஒருபக்கம் அரசியல் தொடர்பான பல பேட்டிகளை கொடுப்பதோடு, பல அரசியல் விவாதங்களிலும் பிஸ்மி கலந்து கொள்கிறார். கடந்த பல மாதங்களாகவே அவர் முதல்வர் விஜயை ஆதரித்து பேசி வந்தார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலில் பேசிய பிஸ்மி சீமானை விமர்சித்து பேசியதாக சொல்லப்படுகிறது. எனவே நாம் தமிழர் கட்சியிர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி விக்டோரியா கௌரி ‘முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசினால் ஒரு எம்.எல்.ஏ-வை கைது செய்யும் காவல்துறை சீமான் விவகாரத்தில் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?’ என கேள்வி எழுப்பினார்
மேலும் சீமான் பற்றி அவதூறு பேசிய யுடியூபர்ஸ் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. மேலும் ‘தேர்தலில் வெற்றியோ.. தோல்வியோ சீமான் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராகத்தான் இருக்கிறார்’ எனவும் நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.

