தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். ஆடுகளம், அசுரன், வட சென்னை, விசாரணை, விடுதலை, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
தற்போது சிம்புவை வைத்து அரசன் என்கிற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். ஒருபக்கம் கென் கருணாசை வைத்து ராஜன் வகையறா என்கிற படத்தையும் அவர் இயக்கி வருகிறார். வடசென்னை படத்தில் இடம் பெற்ற அமீரின் கதாபத்திரம் சிறுவனாக இருக்கும்போது நடக்கும் சம்பவங்கள்தான் ராஜன் வகையறா திரைப்படமாக உருவாகி வருகிறது. சிறு வயது அமீராக கென் கருணாஸ் நடித்து வருகிறார்.
சிறு வயது அமீர் நண்பர்களோடு சேர்ந்து என்ன செய்கிறார், எப்படி அவர் கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. பல வருடங்களுக்கு முன்பாக வெளியாகி உலக அளவில் பிரபலமான City of God பட ஸ்டைலில் இந்த படத்தை வெற்றிமாறன் உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய புதுப்பேட்டை படமும் இந்த படத்தின் பாதிப்பில் இருந்துதான் என சொல்வதுண்டு. அரசன், ராஜன் வகையறா ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் மாறி மாறி வெற்றிமாறன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

