சிறுத்தை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். அதில் விவேகத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. அதேபோல், ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்த திரைப்படமும் ஹிட் படமாக அமையவில்லை.
ஆனால் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய கங்குவா திரைப்படம் கடுமையான ட்ரோலில் சிக்கியதோடு பாக்ஸ் ஆபிசிலும் தோல்வியடைந்தது. கங்குவா திரைப்படம் 2024 நவம்பர் மாதம் வெளியானது. தற்போது வரை சிறுத்தை சிவாவுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை.
அதாவது அவரின் இயக்கத்தில் நடிக்க எந்த நடிகரும் முன்வரவில்லை. துபாயில் கார் ரேஸில் இருந்த அஜித்தை ஒருமுறை அவர் சந்தித்து பேசியபோது ‘மீண்டும் நாம் இணைந்து படம் செய்வோம்’ என அவரிடம் அஜித் வாக்குறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், எது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.
எனவே, தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியிலும் சிறுத்தை சிவா ஈடுபட்டார். ஆனால் அதுவும் தற்போது நடக்குமா என்பது தெரியவில்லை. எனவே அப்செட்டில் இருக்கிறாராம் சிவா.

