இந்தியா

தவெக ஆட்சிக்கு முடிவு!.. திமுக மாஜி அமைச்சர்கள் போட்ட ரகசிய மீட்டிங்?!..

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் துவங்கிய தமிழக வெற்றில் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களிலேயே 35 சதவீத வாக்குகளை பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மாறியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு பின் விஜய்க்குதான் இது நடந்திருக்கிறது.

தவெக இப்படி ஒரு வெற்றியை பெரும் என திமுக கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அதுவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூரில் தவெக வேட்பாளரிடம் தோற்றுப் போனார். அதனால் அவரால் சட்டசபைக்கு கூட வர முடியவில்லை. ஒருபக்கம் கடந்த ஆட்சியில் செய்த ஊழல்களை தவெக அரசு ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவெக அமைச்சர்கள் தொடர்ந்து சட்டசபையில் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் ரகசியமாக சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது 2027 பொங்கலுக்குள் தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.. அவர்கள் எல்லாத்தையும் தோண்ட தொடங்கி விட்டார்கள்.. அதிமுகவும் நமக்கு துணையா நிக்கும்.. நாம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரணும்’ என்று சிலர் அதில் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக, காவிரி விவகாரம் போன்ற தமிழக நலன் சார்ந்த விஷயங்களை கையிலெடுத்து அதை பேசி தவெக அரசின் மீது மக்களுக்குள்ள இமேஜை குறைக்க வேண்டும் என அவர்கள் திட்டம் தீட்டி வருவதாக சொல்லப்படுகிறது..

அதேபோல், அரசுக்கு எதிராக தவெக எம்.எல்.ஏக்கள் சிலரையே கண்டனம் தெரிவிக்கவைத்து சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் எனவும் அவர்கள் நினைப்பதாக பிரபல அரசியல் வார இதழ் ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்