சினிமா

இத பண்ணா மண்டாடி 1000 கோடி அடிக்கும்!.. தயாரிப்பாளருக்கு சத்யராஜ் கொடுத்த ஐடியா!..

காமெடி நடிகராக இருந்து விடுதலை திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக நடித்த தொடங்கியவர் சூரி. அதன் பின் பல படங்களிலும் நடித்து தன்னை ஹீரோவாக நிலைநிறுத்திக்கொண்டார். தற்து மதிமாறன் என்பவர் இயக்கத்தில் மண்டாடி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட கதை ஆகும். இந்த படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்..

இந்நிலையில் மண்டாடி படத்தின் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் அமீர்கானின் தங்கல், 3 இடியட்ஸ் மற்றும் சல்மான்கான் ஆகியோரின் படங்கள் சீனாவில் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுவார்கள். ஒரு வாரம் மூடினாலே அந்த படம் ஆயிரம் கோடியை வசூல் செய்துவிடும். சிவகார்த்திகேயனின் கனா படம் கூட அப்படி வெளியானது.

மண்டாடி படத்தையும் அப்படி சீனா மொழியில் டப் செய்து அங்குள்ள 5 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யுங்கள்.. ஒரு வாரம் ஓடினாலே படம் ஆயிரம் கோடி வசூல் செய்துவிடும்.. இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது.. தமிழில் ஆயிரம் கோடி வசூல் செய்த முதல் படமாக மண்டாடி இருக்க வேண்டும் என்பது என் ஆசை.. படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்’ என பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்