இந்தியா

சர்க்கரை விலை உயர்வு!.. விலை உயரும் ஸ்வீட்ஸ்!.. பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி…

பக்கத்து மாநிலங்களில் கரும்பு உற்பத்தி குறைந்திருப்பதாலும். எத்தனால் தயாரிப்புக்கு கரும்பை அதிக அளவு பயன்படுத்துவதாலும் சக்கரை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் காரணமாக சர்க்கரை விலை சமீபத்தில் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ சர்க்கரை 47க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 70 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது இதன் காரணமாக சர்க்கரையை பயன்படுத்தி விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவிருப்பதால் சர்க்கரையின் தேவை அதிகரிக்கும் நிலையில் சர்க்கரையின் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சர்க்கரை விலை உயர்வு காரணமாக ஸ்வீட் கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் சர்க்கரை விலை அதிகரிப்பு காரணமாக விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ பால்கோவா ரூ.360 விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 400ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரு கிலோ பால் அல்வா 400லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்