காமெடி நடிகராக பல படங்களில் நடித்த சூரி கதாநாயகனாக நடித்த உருவான மண்டாடி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்ற நிலையில் மண்டாடி படத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.
ராமநாதபுரத்தில் வசிக்கும் மீனவர்களின் வாழ்க்கை முறை மற்றும் கடலில் நடத்தப்படும் படகு போட்டி மையமாக வைத்து இந்த படத்தை மதிமாறன் இயக்கியிருந்தார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். படம் வெளியானது முதலே மண்டாடி திரைப்படம் படத்திற்கு நல்ல நேர்மறையான விமர்சனங்கள் வந்தது..
இதன் காரணமாக மண்டாடி திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் ரூ.30 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.

