சினிமா

14 ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலை வழக்கு: பிரபல நடிகைக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்!

பிரபல பாலிவுட் நடிகையும் தொலைக்காட்சியாளருமான ராக்கி சாவந்த், 14 ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்ற விசாரணைகளுக்கு தொடர்ந்து ஆஜராகாததை தொடர்ந்து, உத்திரப் பிரதேசத்தின் ஜான்சி நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘ராக்கி கா இன்சாஃப்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லட்சுமண் அகிர்வார் என்பவர் கலந்து கொண்டார். அப்போது ராக்கி சாவந்த் தன்னிடம் மிகவும் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதால், மன உளைச்சலுக்கு ஆளான அகிர்வார் 2010 நவம்பர் 10 அன்று தற்கொலை செய்துகொண்டதாக அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைகளுக்கு ராக்கி சாவந்த் தொடர்ந்து ஆஜராக தவறியதால், ஜூனியர் சிவில் நீதிபதி அஞ்சலி அவருக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பல்வேறு அரசியல் மற்றும் சினிமா சர்ச்சைகளில் கருத்து தெரிவித்து செய்திகளில் அடிபட்டு வந்த ராக்கி சாவந்திற்கு, இந்த வழக்கு மீண்டும் பெரும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்