சினிமா

என் கணவர் இப்படி இருக்கவேண்டும் – சாய் பல்லவி ஆசைய பாருங்க!..

பிரேமம் திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடக்கத்தில் மலையாள படங்களில் நடித்தாலும் அதன்பின் தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

தமிழில் மாரி 2, என்.ஜி.கே, அமரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் அமரன் திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். நிறைய தெலுங்கு படங்களிலும் சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தின் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படத்தில் சாய் பல்லவி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..

இந்நிலையில், தனது வருங்கால கணவர் பற்றி கருத்து தெரிவித்த சாய் பல்லவி ‘எனது தனிப்பட்ட சுதந்திரத்தையும், தொழிலையும் மதித்து லட்சியங்களை அடைய துணையாக இருப்பவர்தான் எனது வருங்கால கணவராக இருக்க வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பது அவசியம் என நான் நினைக்கிறேன்.. நல்ல நகைச்சுவை உணர்வும், சமைக்க தெரிந்தவராகவும் இருக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு’ என அவர் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்