சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன்.. வாய்ப்புக்காக போராடி நிறைய வாய்ப்பு கேட்டு அலைந்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கி மெரினா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்து அவரை பட்டிதொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது.. அதன்பின் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிடுவது, தயாரிப்பது போன்ற வேலைகளையும் அவர் செய்து வருகிறார்.
மேலும் சின்ன பட்ஜெட்டுகளில் நல்ல கதை அம்சங்கள் கொண்ட படங்கள் வெளியானால் அந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுகிறார்.. இப்படி பல நல்ல குணங்கள் சிவகார்த்திகேயனிடம் உண்டு. இந்நிலையில்தான் சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான பிரேம் குமார் சிவகார்த்திகேயனை பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லி இருக்கிறார்.
என் மகனுக்கு நெதர்லாந்தில் மேல் படிப்பு படிக்க சீட் கிடைத்தது. ஆனால் அதற்கு 50 லட்சம் பணம் தேவைப்பட்டது. என்னுடைய வீட்டை நான் தவணை முறையில் வாங்கியிருந்ததால் வங்கியில் கடன் கிடைக்கவில்லை. என்னுடைய நிலைமையை சிவகார்த்திகேயனிடம் சொன்னபோது எதுவும் கேட்காமல் ரூ.50 லட்சம் பணம் கொடுத்து உதவினார். இன்று என் மகன் மாதம் 4-5 லட்சம் சம்பாதிக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிவாதான். அவர் எனக்கு உதவி செய்யவில்லை வாழ்க்கை கொடுத்திருக்கிறார்’ என உருகியிருக்கிறார்.

