உலகம்

நெதன்யாகு எங்க காலேஜ் மேல ஒரு குண்டு போடுங்க!.. பகீர் கிளப்பிய அமெரிக்கா மாணவி கைது!

கடந்த சில வருடங்களாகவே இஸ்ரேல் பல நாடுகளின் மீதும் போர் நடத்தி வருகிறது. குறிப்பாக காசா நாட்டின் மீது இஸ்ரேல் நாடு தாக்கியதில் அந்த நகரே உருக்குலைந்துவிட்டது. குழந்தைகள் உட்பட பல ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர். பல லட்சம் பேர் அந்த நாட்டிலிருந்து வெளியேறிவிட்டனர்.

மற்றொரு பக்கம் ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை நடத்தி வருகிறது. போர் துவங்கிய இரண்டாம் நாளே இஸ்ரேல் தாக்கியதில் ஈரான் நாட்டின் உசச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். மேலும் ஒரு பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் இறந்து போனார்கள்.

தற்போது அமெரிக்கா – ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.. ஏற்கனவே இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதை நீட்டுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.இந்தப்போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி ‘நெதன்யாகு எங்கள் பல்கலைக் கழகம் மீது சில குண்டுகளை வீசுங்கள்’ என்று வாட்ஸ் அப் குழுவில் மெசேஜ் செய்தார்.. நகைச்சுவைக்காக கூறினேன் என மாணவி கூறினாலும் அந்த குழுவில் இருந்த சக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவியை ஃப்ளோரிடா போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த