இந்தியா

விர்ஜின் பொண்ணுதான் வேணும்!. விவகாரத்து நபரின் ஆசையை பாருங்க!

இப்போதெல்லாம் முதல் திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமல்ல.. இரண்டாம் திருமணம் செய்து கொள்வோர்கள் கூட திருமணத்திற்கு பல நிபந்தனைகளை போடுகிறார்கள்.. முன்பெல்லாம் திருமண புரோக்கர் என்று தனியாக நபர்கள் இருந்தார்கள்.. இப்போதும் இருக்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலானோர் ஆன்லைனில் பல பிரபலமான இணையதளங்களில் தங்களுக்கான வரங்களை தேடுகிறார்கள். இப்பதெல்லாம் ஒரு சாதிவாரியாக இணையதளங்கள் வந்துவிட்டது. அதேபோல், விவகாரத்து பெற்றவர்கள் இரண்டாவது திருமணம் செய்வதற்கும் இப்போது பல இணையதளங்கள் வந்துவிட்டன.

இந்நிலையில் 37 வயதான விவாகரத்து பெற்ற ஒரு ஐடி துறையில் பணியாற்றும் ஒரு நபர் தனக்கு 30 வயதுக்குள், திருமணமாகாத, யாரையும் காதலித்திருக்காத, இந்தியாவில் குறிப்பிட்ட உயர் சாதியை சேர்ந்த வெர்ஜின் பெண் வேண்டும் என்று கேட்டது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

பிரபல மேட்ச் மேக்கர் ஓந்திரில்லா கபூர் இதை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட கிளைண்டே தனக்கு வேண்டாம் என கூறியுள்ள ஓந்திரில்லா ‘நீங்கள் கேட்கும்படியே ஒரு பெண் இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் எதற்காக விவாகரத்தான 37 வயது நபரை மணந்து கொள்ள வேண்டும்?’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்