இந்தியா

5949 பதட்டமான வாக்குச்சாவடிகள்!.. பலத்த பாதுகாப்பு!.. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23ம் தேதியான நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் அணையின் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தமாக இந்த முறை 4023 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

நாளை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எனவே நாளை வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ‘தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் எனவும், தமிழகத்தில் மொத்தம் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், 62 வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் 326 தேர்தல் பார்வையாளர்கள், 136 பொது பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 150 செலவீன பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். குறிப்பாக தமிழகத்தில் 5949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் அவர் அறிவித்தார். அதோடு தமிழகத்தில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் அர்ச்ச பட்நாயக் தெரிவித்தார். அதோடு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்