இலங்கை

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் கொழும்பிலிருந்து காங்கேசன் துறை வரை சேவையில் ஈடுபடவுள்ளது.

இச்சேவையானது எதிர்வரும் (11.05.2026) திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த தினங்களில் கொழும்பிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு வவுனியாவை 11.36 மணிக்கு கிளிநொச்சி நகரத்தை 12.51 மணிக்கும் யாழ்ப்பாணத்தை 1.59 மணிக்கும் வந்தடையும் புகையிரதம் இறுதியாக 2.33 மணிக்கு காங்கேசன் துறையை சென்றடையும்.

அவ்வாறே எதிர்வரும் செவ்வாய்க் கிழமையிலிருந்து (12.05.2026) திகதியிலிருந்து காங்கேசன் துறையில் ஆரம்பிக்கும் புகையிரத சேவையானது யாழ்ப்பாணத்தில் 11.00 மணிக்கும் கிளிநொச்சியில் 12.14 மணிக்கும் வவுனியாவில் 1.35 மணிக்கும் சென்றடைந்து இறுதியாக கொழும்பு கோட்டையை 07.03 மணிக்கு சென்றடையும்.

இப் புகையிரத்திற்கான கட்டடங்கள் சாதாரண கட்டணங்களாகவே அறவிடப்படவுள்ளன.

இவற்றைத் தவிர வழமை போன்று முதலாம் இரண்டாம் வகுப்பு ஆகியவற்றிற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்