சினிமா

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து!.. மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. ஜெயிலர் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது ஜெயிலர் 2 உருவாகி வருகிறது.

கடந்த பல மாதங்களாகவே சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த படத்தில் முதல் பாகத்தை போலவே சிவ்ராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலரும் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வந்த போது மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்கிற ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம் படப்பிடிப்பில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்த ஊழியருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டும் என திரையுலகில் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்