திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழக முதலமைச்சராக மாறியவர்களில் விஜயும் ஒருவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நினைத்ததை சாதித்து காட்டியிருக்கிறார் விஜய். அதோடு தவெக தலைவர் விஜயின் தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். முதலமைச்சரானவுடன் விஜய் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. தினமும் அதிரடியான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்நிலையில்தான், திரைத்துறையினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு ஐந்து காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதோடு பண்டிகை நாட்கள், பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் ஐந்து காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இது திரைத்துறையினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.. விஜய் முதலமைச்சரானவுடன் சில நாட்களுக்கு முன்பு திரைப்படத்துறையினர் விஜயை சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

