தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்து, இன்று பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தி இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைக் குவித்து வரும் வேளையில், அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் அமீரின் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, முதல் படத்திலேயே தேசிய விருது பெறும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து:
கமர்ஷியல் ஹிட்டான பையா, யதார்த்தமான நான் மகான் அல்ல, மெட்ராஸ் தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை என ஒவ்வொரு படத்திலும் வித்யாசம் காட்டி, தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கார்த்தியின் 30-வது படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேட் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கல்யாண் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.
பூஜை மற்றும் படப்பிடிப்பு: இப்படத்தின் பூஜை அண்மையில் எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு அதிரடி கலந்த கமர்ஷியல் எண்டர்டெய்னராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

