உலகம்

இனி யூடியூபில் உங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வியும் கேட்கலாம்.. அறிமுகமாகிறது Ask YouTube..

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் Ask YouTube என்ற புதிய உரையாடல் சார்ந்த தேடல் அனுபவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை நாம் ஒரு பொருளை தேடும்போது வெறும் வீடியோக்களின் பட்டியல் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால், இனி பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கேள்விகளாகக் கேட்டு, அதற்கான துல்லியமான பதில்களை பெற முடியும். உதாரணமாக, மெரீனா கடற்கரைக்கு ஒரு சாலை பயணம் திட்டமிடுவது அல்லது குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுப்பது போன்ற சிக்கலான கேள்விகளுக்கு பதில் தேட இந்த வசதி பெரிதும் உதவும்.

இந்த தொழில்நுட்பம், யூடியூப்பில் உள்ள நீண்ட வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மிக முக்கியமான தகவல்களை திரட்டி தரும். பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, வீடியோக்களின் பட்டியலாக மட்டும் காட்டாமல், ஒரு கட்டமைக்கப்பட்ட பதிலை தரும் என்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும், பதிலை பெற்ற பிறகு, அதனுடன் தொடர்புடைய கூடுதல் கேள்விகளை கேட்டு உரையாடலைத் தொடரவும் முடியும்.

தற்போது இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இது உலகெங்கிலும் உள்ள அனைத்து யூடியூப் பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் தகவல்களைத் தேடும் முறையை எளிமையாக்குவதுடன், நேரத்தையும் மிச்சப்படுத்தும் ஒரு நவீன முயற்சியாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த