தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் ஃபேன் இந்தியா நடிகராக மாறியவர் பிரபாஸ். ஏனெனில் அந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதற்கு பின்பு வெளியான பாகுபலி 2 திரைப்படம் ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய அளவில் பிரபாஸை ஒரு பெரிய நடிகராக மாற்றியது. 25 கோடி சம்பளம் வாங்கி பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் அந்த படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை 150 கோடிக்கு மேல் உயர்த்தினார்.
மேலும், பாகுபலி 2-வுக்கு பின் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களும் பேன் இண்டியா படங்களாக வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பிரம்மாண்டமான சொகுசு பங்களாவை நடிகர் பிரபாஸ் கட்டி வருகிறாராம். ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த பங்களாவில் மினி தியேட்டர், நீச்சல் குளம், ஜிம் போன்ற எல்லா அம்சங்களும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

