சினிமா

நீதிபதின்னா புனிதமானவர்களா?.. கருப்பு தொடர்பான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்!

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. இந்த படத்தில் வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ணசாமி என இரண்டு தோற்றங்களில் சூர்யா வருகிறார். பல வருடங்களுக்கு பின் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமைந்திருக்கிறது.

கடந்த 15 வருடங்களில் தியேட்டரில் வெளியான எந்த திரைப்படமும் சூர்யாவுக்கு ஓடவில்லை. ஆனால் ஆனால் கருப்பு திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. தியேட்டர்களில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில்தான் கருப்பு திரைப்படத்தில் நீதித்துறையில் ஊழல் இருப்பது போல காட்சிகள் காட்டப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் ஊழல் செய்கிறார்கள் என்பது போல ஒரு காட்சி வருகிறது. அதையடுத்து இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. நீதித்துறையில் ஊழல் இருக்கிறது யாரும் மறுக்க முடியாது.. நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை.. ஒட்டு மொத்த நீதித்துறையும் ஊழல் நிறைந்ததாக படம் சித்தரிக்கவில்லை. இது கருத்து சுந்தரம் மட்டுமே’ என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு கருத்து தெரிவித்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்