இந்தியா

அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் இடம் ஒப்படைத்த சிவி சண்முகம்.. சமரசம் ஆகிவிட்டாரா?

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக உரிமை தொடர்பான மோதல், தற்பொழுது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சரும் தற்போதைய மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி. சண்முகம் தரப்பினர், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலச் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்டச் செயலாளர் பசுபதியிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்ததால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி. சண்முகத்திற்கும் இடையே கடும் பிளவு ஏற்பட்டது. அண்மையில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ்-ஐ சந்தித்து மீண்டும் ஒரே அணியாக இணைந்த போதிலும், சி.வி. சண்முகம் மட்டும் அவரை சந்திக்கச் செல்லாமல் விலகியே இருக்கிறார்.

இதற்கிடையே, தனது மயிலம் தொகுதி கிராமங்களில் திறந்த வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை தொடங்கிய சி.வி. சண்முகம், “என்னை நம்பித் தேர்ந்தெடுத்த மக்களுக்கு எனது கடமையை முழுமையாக செய்வேன்; மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களுடனேயே இருந்து தேவையான உதவிகளை செய்ய என்றும் தயாராக இருக்கிறேன்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

சாவியை ஒப்படைத்த போதிலும், தொகுதி மக்களுக்கான தனது அரசியல் பணியைத் தீவிரமாகத் தொடரப் போவதாக அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்