தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ராம்சரண். தெலுங்கு சினிமா சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் இவர். கடந்த பல வருடங்களில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்து வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்திய அளவில் அனைத்து ரசிகர்களிடம் பேராதரவை பெற்று பல கோடிகள் வசூல் செய்தது.
இந்நிலையில்தான், தற்போது Peddy என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 4ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் புரமோஷன் பணியில் தற்போது ராம்சரண் ஈடுபட்டிருக்கிறது. நேற்று கூட சென்னையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நடந்தது.
இந்நிலையில்தான் சமீப காலமாக ராம்சரனுடன் உடன் வரும் அவரின் பாடிகார்ட் பற்றிய தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவரின் பெயர் கெவின் குண்டா. இவர் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர். அதோடு சர்வதேச மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) சண்டை வீரர் ஆவார். சரணுக்கு முன்பாக இவர் ஐரோப்பாவில் பிரபல தொழிலதிபர்கள், வி.ஐ.பிகள் மற்றும் ஹாலிவுட் நடிகர்களுக்கும் பாதுகாவலராக இருந்திருக்கிறார். இவருக்கு ஒரு நாளைக்கு 2 முதல் 4 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பாடிகார்டாக கெவின் குண்டா இருக்கிறார்.

