சினிமா

சாய் அபயங்கருக்கும் காரை பரிசளித்த சூர்யா!.. ஆர்.ஜே.பாலாஜிக்கு என்ன?

சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைக்கவில்லை. கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெற்றி பெறாமல் போனது. மெட்ரோ படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில்தான், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்தார் சூர்யா.

கருப்பண்ணசாமி மண்ணில் சூர்யாவாக வந்து நீதியை நிலை நாட்டுவது போல கதையை எழுதியிருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வில்லனாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

கருப்பு திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து இதுவரை 300 கோடி வசூலை தாண்டிவிட்டது. சூர்யா நடித்து வெளியான படங்களிலேயே கருப்புதான் அதிக வசூலை பெற்றிருக்கிறது. இது சூர்யாவுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதையடுத்து இந்த படத்தில் பணிபுரிந்த முக்கியமானவர்களுக்கு பரிசளித்து வருகிறார் சூர்யா. ஏற்கனவே, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு 30 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா BE6 காரை பரிசளித்தார். தற்போது அதே காரை இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும் சூர்யா பரிசளித்திருக்கிறார். இதை சாய் அபயங்கர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து சூர்யாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்