தென்னிந்தியத் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத ‘லேடி சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்துடன் வலம் வருபவர் நயன்தாரா. ஐயா படத்தில் தொடங்கி, ரஜினி, விஜய், அஜித் எனப் டாப் ஹீரோக்கள் முதல் இன்றைய இளம் நாயகன் கவின் வரை அனைவருடனும் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவை ஆண்ட நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் இணைந்து நடித்து வரும் ஒரு புதிய படத்திற்காக, நயன்தாராவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை தென்னிந்திய நடிகைகளில் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.
நயன்தாராவின் இந்த இமாலய சாதனையை, தற்போது ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா முறியடித்துள்ளார்.
பாலிவுட்டில் தற்போது உருவாகி வரும் காக்டெய்ல் 2(Cocktail 2) படத்தில் ராஷ்மிகா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு சுமார் 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா பெற்றுள்ளார். நயன்தாராவின் 10 கோடி ரூபாய் சம்பள சாதனையை, ராஷ்மிகா 15 கோடி ரூபாய் பெற்று பின்னுக்குத் தள்ளியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா, இப்போது பாலிவுட்டில் முன்னணி நாயகிகளுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளார். நயன்தாரா சீனியர் நடிகையாகத் திகழ்ந்தாலும், ராஷ்மிகாவின் அசுர வளர்ச்சி மற்றும் பாலிவுட் மார்க்கெட் மதிப்பு அவருக்கு இந்த ஜாக்பாட் சம்பளத்தைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், 20 ஆண்டுகளாகத் தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் நயன்தாரா காட்டி வரும் ‘ஸ்டார் பவர்’ இன்றும் ஒரு வியக்கத்தக்க விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

