சமீபத்தில் திருச்சி சென்ற முதல்வர் விஜய் அங்கு பேசியபோது ‘நாம் கோட் அணிவது கூட சிலருக்கு பிடிக்கவில்லை. ஏன் நாமெல்லாம் கோட் போடக்கூடாதா?.. நம் மனதிற்குள் இருப்பது போலவே கருப்பு, வெள்ளையை வெளிப்படுத்தும் விதமாகவே அந்த நிறத்தில் கோட் சூட் அணிந்து இருக்கிறேன்’ என்று பேசினார்.
மேலும் தமிழக முதலமைச்சராக பேசாமல் வழக்கம் போல் அங்கும் பிரச்சாரத்தில் பேசுவது போலவே விஜய் பேசினார். அதே ஸ்கிரிப்ட், அதே உடல்மொழி.. கடந்த 20 நாட்களில் தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்ன? இனி செய்யப் போகும் திட்டங்கள் என்ன? அரசின் மீது பொதுமக்களுக்கு வந்துள்ள குழப்பங்கள், எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் என்ன? என்பதை பற்றியெல்லாம் பேசாமல் வழக்கம் போல அங்கு சென்று திமுகவையே திட்டிக் கொண்டிருந்தார் முதல்வர் விஜய். இதை சமூகவலைத்தளங்கலில் பலரும் ட்ரோல் செய்தனர்..
இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக நிர்வாகிகள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘அவர்(விஜய்) கோட் போட்டாது பற்றியெல்லாம் நாங்கள் பேசவே இல்ல. அவரா கற்பனை பண்ணி பேசிட்டிருக்காரு.. அதுவும் கருப்பு கோட் போட்டிருப்பது பெரியாரின் கொள்கையாம்.
இதைவிட மோசமான உருட்டு யாராவது உருட்ட முடியுமா?.. ஜோசியரை ஆலோசகராக நியமிக்க முயற்சி செய்து பல்பு வாங்கியவர் பெரியாரிஷ்டா?.. நீங்கள் கோட் சூட் போடுவதில் எந்த பிரச்சனையும் கிடையாது.. ஆனால் எல்லாத்துலயும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. அதுதான் பிரச்சனை.. அதைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம்’ என அவர் பேசினார்..

