தமிழகத்தில் பாஜக தலைவராக செயல்பட்டவர் அண்ணாமலை. இவர் பாஜக தலைவராக இருந்த போதுதான் பாஜகவும் தமிழகத்தில் பிரபலமானது. பாஜகவின் வாக்கு வங்கியும் அதிகரித்தது. ஆனால், சில காரணங்களால் அவரிடமிருந்த கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.
இதனால், டெல்லி பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தி அடைந்தர். எனவே, சில நாட்களுக்கு முன்பு பாஜகவிலிருந்து வெளியேறினார். அப்போது வெளியிட்ட வீடியோவில் புதிதாக ஒரு இயக்கத்தை துவங்கவிருக்கிறேன்.. மாற்றத்தை விரும்புவர்கள் அந்த இயக்கத்தில் இணையலாம் என கூறி இருந்தார்.. இந்த இயக்கத்தில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய் முதல்வராக மாறியுள்ள நிலையில் அண்ணாமலை அரசியல் இயக்கம் துவங்கியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவர் விசாகன் விரைவில் அண்ணாமலையின் இயக்கத்தில் இணையவுள்ளாராம்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லி கடைசி வரை வரவில்லை. ஆனால் விஜய் இரண்டு வருடத்தில் கட்சித் வங்கி முதலமைச்சராகிவிட்டார். விஜயின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றபோது ரஜினி முக ஸ்டாலினை சந்தித்து பேசியது விவாதங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஜினி விளக்கமும் அளித்திருந்தார். மேலும், நானும் கட்சி துவங்கியிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்றெல்லாம் கூறினார். இந்த நிலையில்தான் அவரின் குடும்பத்திலிருந்து ஒருவர் அண்ணாமலை இயக்கத்திற்கு போவது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

