சினிமா

பாக்யராஜ் படத்துக்கு விருது கொடுக்காமல் தவிர்த்த எம்.ஜி.ஆர்!. காரணம் இதுதான்!

மறைந்த நடிகர் மற்றும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் திரையுலகில் சிலரோடு மட்டுமே நெருங்கி பழகினார். அவர்களுக்கு பிடித்தமான இயக்குனர்களில் பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்ள் இருந்தார்கள். இதில், பாக்யராஜின் எல்லா திரைப்படங்களிலும் எம்ஜிஆர் பார்த்துவிட்டு பாரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பெண்களை கவரும் படி திரைப்படங்களை எடுத்ததால் பாக்யராஜை தனது கலை வாரிசு என்றும் எம்ஜிஆர் அறிவித்தார். அந்த அளவுக்கு பாக்யராஜின் படங்கள் எம்ஜிஆர்க்கு பிடித்திருந்தது.

பாக்கியராஜ் இயக்கி நடித்து 1981ம் வருடம் வெளியான திரைப்படம் அந்த ஏழு நாட்கள்..

இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வருடத்திற்கான தமிழக அரசு விருது பட்டியலில் அந்த ஏழு நாட்கள் படம் இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு விருது கொடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் அப்போது முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பாக்யராஜ் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி கூறியிருக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்னை அழைத்து எம்ஜிஆர் ‘ விருது பட்டியலில் உன் படம்தான் முதல்ல இருக்கு.. ஆனா அத நான் அடிச்சிட்டேன்’ என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.. அவரோ ‘இந்த அரசியல் மிகவும் மோசமானது.. உன் படத்தை ஜனங்க பாராட்டி பிரமாதமா ஓடுது.. இப்ப நான் அந்த படத்துக்கு விருது கொடுத்தால் என்னையும் நீ நடிச்ச பாலக்காட்டு மாதவன் கதாபாத்திரத்தையும் முடிச்சி போட்டு பேசுவானுங்க.. அதனால் அந்த படத்துக்கு இருக்கிற மரியாதை போய்விடும். எனவே, விருது கொடுத்து இந்த படத்தை நான் கெடுக்க விரும்பல’ என்று சொன்னார்’

என சொல்லியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்