உலகம்

முடிவுக்கு வந்த போர்!.. அமெரிக்கா – இரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி போரை துவங்கியது. இஸ்ரேலின் தாக்குதலில் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவர் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தில் 16 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.

இதனையடுத்து அமெரிக்காவின் இராணுவ தடங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது.

எனவே, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க இறங்கியது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் ஈரான் நாட்டுடன் தொடர்ந்து அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஒரு வழியாக இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட்டிருக்கிறது.

தற்போது அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இரு நாடுகளும் 14 அம்சங்களை கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் போரை நிறுத்துவதற்கு உடன்பாடு எட்டியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவது, ஹார்மூஸ் நீரிணையை 60 நாட்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் தடையின்றி பயன்படுத்தும் வகையில் திறப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஈரானும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த