இந்தியா

கூலிப்படைக்கு ரூ.4 லட்சம்!. கணவரை காலை உடைத்த மனைவி!.. தாம்பரத்தில் பரபரப்பு..

கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவனை மனைவியே கூலிப்படை வைத்து காலை உடைத்த சம்பவம் சென்னை தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாம்பரம் அடுத்துள்ள வேங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன்*(42). இவரின் மனைவி வசந்தா(40). இவர்களுக்கு கவிதரன் என்கிற 11 வயது மகன் இருக்கிறார்.

6 வருடங்களுக்கு முன்பு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே போன வசந்தா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதன் பின்னர்தான் வசந்தா ஆட்டோ ஓட்டுனர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்று வில்லியம்பாக்கம் அடுத்துள்ள ஒரத்தூரில் குடும்ப நடத்தி வந்தது தெரிய வந்தது..

தாமோதரன் பலமுறை மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை. எனவே தனது மகனுடம் வெங்கம்பாக்கத்தி தாமோதரன் தனியாக வசதி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ‘என் மகனை என்னிடம் அனுப்பு’ என்று வசந்தா கேட்டிருக்கிறார். ஆனால் தாமோதரன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால், கோபமடைந்த வசந்தா கூலிப்படையை அமைத்து தாமோதரனின் காலை உடைக்க சொல்லியிருக்கிறார்.

கூலிப்படை இரும்பு பேஸ்பால் பேட்டால் தாக்கியதில் தாமோதரனின் வலது கால் முறிந்தது. அதன்பின் பொதுமக்கள் அங்கு வரவே கூலிப்படையினர் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரத், அகஸ்டின் ஆகிய இருவருக்கும் பணம் கொடுத்து வசந்தா இதை செய்ய சொன்னது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்..

கணவரின் காலை உடைக்க 4 லட்சம் ரூபாய் பேசி அதில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன் தொகையாக வசந்தா கொடுத்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்