ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த கமர்ஷியல் எண்டர்டெய்னராக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற பிளாஸ்ட் திரைப்படம், தியேட்டர்களைத் தொடர்ந்து தற்போது ஓடிடி ரசிகர்களையும் தன்வசப்படுத்த தயாராகிவிட்டது.
கடந்த மே 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான பிளாஸ்ட் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலையும், பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. தியேட்டர் ரிலீஸாகி ஒரு மாதத்திற்குள் படம் ஓடிடிக்கு வரவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்ட் திரைப்படம் வரும் ஜூன் 25, 2026 முதல் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரம்மாண்டமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். கேஜிஎஃப் , சலார் போன்ற படங்களுக்கு இசையமைத்து இந்தியாவையேதிரும்பி பார்க்கவைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

