இந்தியா

கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ்!..

விற்பனைக்கு அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தபட்சம் 15 மணி நேரத்திற்கு முன்பே உற்பத்தியாளர்கள் தீவனம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பு சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் அதை பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, ஜூலை 31ம் தேதியான நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும், தமிழ்நாடு புதுச்சேரி ஆக இரண்டு மாநிலங்களில் உள்ள அனைத்து பிராய்லர் கோழி கறி கடைகளும் மூடப்படும் எனவும் வணிகர் கூட்டமைப்பு சங்கங்கள் அறிவித்தது.

இது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்திய தீவனக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாக உற்பத்தியாளர்கள் உறுதியளித்ததால் நாளை நடக்கவிருந்த பிராய்லர் கோழி வணிகர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு கறிக்கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தற்போது அறிவித்திருக்கிறது.

எனவே பிராய்லர் கோழி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்