இந்தியா

இன்று தமிழக அரசு பட்ஜெட் தாக்கல்!. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?..

தவெக ஆட்சிக்குவந்துள்ள நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடவிருக்கிறது. 2026 – 27 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய விஷன் இன்று தாக்கல் செய்யவிருக்கிறார்.

இந்த பட்ஜெட் மிகவும் சிறப்பாக அமைய வேண்டும் என முதல் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதத்திலிருந்து அரசின் அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார்.

அதன்பின் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது, இன்றைய பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக குடும்பத் தலைவிக்கு மாதம் 2500 ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை போன்ற தேர்தலுக்கு முன்பு தவெக சார்பில் கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜயை ஆபாசமாக பேசியது தொடர்பாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் இன்று சட்டசபை கூடவிருக்கிறது என்பதால் சட்டசபை பட்ஜெட்டை திமுக புறக்கணிக்கும் என சொல்லப்படுகிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க தவெக, திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து சட்டமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்