சினிமா

குழந்தை விசயத்தில் விருப்பம் இல்லை .. துஷ்ரா விஜயன் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தனது தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் மூலம் கவனம் பெற்றுவரும் இளம் நடிகைகளில் ஒருவர் துஷ்ரா விஜயன் . இவர், பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றார். அதன் பின்னர் நட்சத்திரம் நகர்கிறது , ராயன்*, வேட்டையன் , வீர தீர சூரன் – பாகம் 2 உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார்.

கதாநாயகியை மையமாகக் கொண்ட வழக்கமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்யாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் துஷ்ரா. சமீபத்திய பேட்டியிலும், தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் குறித்து பேசும்போது, ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்பை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது துஷ்ரா விஜயன் நடித்துள்ள GDN திரைப்படம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஆர். மாதவன், சத்யராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தில் துஷ்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஷால் நடித்து இயக்கியுள்ள மகுடம் திரைப்படத்தில் துஷ்ரா விஜயன் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்துப் பேசிய துஷ்ரா விஜயன், நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியவில்லை. இதில் நான் ஒரு குட்டி பாப்பாவை பெற்று அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து என் அக்கா பசங்களுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கிக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் நான் யாரை டேட் செய்தாலும், குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிடுவேன் என்றும் துஷ்ரா விஜயன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்