சினிமா

3 மாதங்களில் நிச்சயதார்த்தம்!. எனக்கு பிடிக்கல!.. அனுபமா பரமேஸ்வரன் பகீர்!..

பிரேமம் படம் மூலம் நடிக்க துவங்கியவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி உள்ளிட்ட சில படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்தான், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களைப் பற்றி மிகவும் வெளிப்படையாக அவர் பேசியிருக்கிறார்.

இதற்கு முன்பு தான் ஒரு உறவில் இருந்ததாகவும் முதல் சந்திப்பிலேயே தன்னை வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பத்தினரை சந்திக்க வைத்து மூன்று மாதங்களில் நிச்சயதார்த்தம் குறித்து தீவிரமாக பேசியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அந்த அதீத வேகம் காதலுக்காக அல்லாமல் தன்னை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவசரமாக இருந்ததை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அனுபமா அதன் காரணமாக அந்த நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து தள்ளிப் போட்டதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் முந்தைய காதலன் யார் என்பது பற்றி அனுபமா எதுவும் கூறவில்லை.

அந்த காதல் உறவு காரணமாக ஒவ்வொரு வார்த்தையும் யோசித்துப் பேச வேண்டிய கட்டாயம் இருந்ததால் எப்போதும் ஒருவித எச்சரிக்கையுடனேயே இருந்தேன். எனது முந்தைய உறவில் எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருந்தேன் எனவும் அனுபமா கூறியிருக்கிறார். தற்போது நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவோடு அனுபமாவுக்கு காதல் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறதது. ஆனால், அனுபமா சொன்னது துருவா அல்லது அதற்கு முந்தைய காதலா என்பது தெரியவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்