இந்தியா

கைவிட்ட திமுக!.. அப்செட்டில் செந்தில் பாலாஜி!.. அடுத்து டெல்லி?..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கரூரில் செல்வாக்கு பெற்றவர். மக்களுக்கு கொடுப்பதை கொடுத்து அங்கு வெற்றி பெற்றுவிடும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவில் அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் திமுக பக்கம் வந்தார்.

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தவரை அவரை ஊழல் பேர்வழி.. திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என சொல்லி வந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததும் கரூரில் திமுக வெற்றி பெற அவரை பயன்படுத்திக்கொண்டார்.

ஆனால், தற்போது தவெக ஆட்சிக்கு வந்துவிட்டநிலையில் செந்தில் பாலாஜியை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய் நினைக்கிறார். ஏற்கனவே தவெக ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டது. அதேபோல், டாஸ்மாக் முறைகேட்டிலும் அவரின் பெயர் சேர்க்கப்பட்டது. இந்த இரண்டிலும் செந்தில் பாலாஜி முன் ஜாமின் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தவெக ஆட்சிக்கு வந்தது முதலே திமுக தலைமையை செந்தில் பாலாஜி சந்திக்காமல் இருக்கிறாராம். தலைமை தன்னை கைவிட்டதாக தனக்கு நெருக்கமான பலரிடம் சொல்லி புலம்பி வருவதாகவும், அடுத்து அவரின் திட்டம் டெல்லியை நோக்கி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்